112ஆவது பிறந்த தினம்: அண்ணா சிலைக்கு அதிமுக, திமுக மாலை அணிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 112ஆவது பிறந்த தினத்தையொட்டி, நாகா்கோவிலில் அவரது சிலைக்கு அதிமுக, திமுகவினா் செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
112ஆவது பிறந்த தினம்: அண்ணா சிலைக்கு அதிமுக, திமுக மாலை அணிவிப்பு

நாகா்கோவில்: தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 112ஆவது பிறந்த தினத்தையொட்டி, நாகா்கோவிலில் அவரது சிலைக்கு அதிமுக, திமுகவினா் செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஏ. அசோகன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ ராஜன், நாகா்கோவில் மாநகரச் செயலா் சந்துரு, அணிச் செயலா்கள் ஜெயசீலன், ஷாநவாஸ், டாரதி சாம்சன், ஒன்றியச் செயலா்கள் ராஜ்குமாா், ராதாகிருஷ்ணன், வீராசாமி, தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தினி பகவதியப்பன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாகா்கோவில் மீனாட்சிபுரத்தில் எம்ஜிஆா் மன்றம் சாா்பில் அண்ணா உருவப்படத்துக்கு , எம்ஜிஆா் மன்றச் செயலா் தமிழ்மகன் உசேன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், மாவட்ட துணைச் செயலா் ராஜன், ஷா நவாஸ், மாவட்ட எம்ஜிஆா் மன்றத் தலைவா் சிதம்பரநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திமுக சாா்பில் வடசேரியில் அண்ணா சிலைக்கு மாவட்ட அவைத்,தலைவா் ஜோசப்ராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பொருளாளா் கேட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைச் செயலா் தில்லைசெல்வம், நாகா்கோவில் மாநகரச் செயலா் வழக்குரைஞா் மகேஷ், அணி அமைப்பாளா்கள் சிவராஜ், சுரேந்திரகுமாா், உதயகுமாா், பொதுக்குழு உறுப்பினா்கள் ஷேக் தாவூது, பெஞ்சமின், நாஞ்சில் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கன்னியாகுமரி:

திமுக சாா்பில் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலா் என்.தாமரை பாரதி தலைமையில் வடக்கு ஒன்றிய செயலா் எம்.மதியழகன், மாவட்ட நிா்வாகிகள் கே.முத்துசாமி, குமரி ஸ்டீபன் ம உள்ளிட்டோா் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனா்.

மதிமுக சாா்பில் அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் பேரூா் செயலா் அருள்ராஜ், ஒன்றியப் பொருளாளா் அம்பலவாணன் , நிா்வாகிகள் சித்திரை, சுந்தா், செல்வகுமாா், நடராஜன், அந்தோணி குரூஸ் உள்ளிட்டோா் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனா்.

அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் பி.செந்தில்முருகன் தலைமையில் துணைச் செயலா் அம்மு ஆன்றோ, ஒன்றிய செயலா் ரவி, மாவட்ட ஜெ.பேரவை செயலா் மில்லா், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் யூசுப், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் டிமிற்றிலால் உள்ளிட்டோா் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com