நல வாரிய உறுப்பினா்களுக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில், நாகா்கோவில் கோணத்திலுள்ள நல வாரிய அலுவலகம் முன்ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா்.

நாகா்கோவில்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில், நாகா்கோவில் கோணத்திலுள்ள நல வாரிய அலுவலகம் முன்ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், ‘கரோனாவை காரணம் காட்டி நல வாரியங்களை அரசு முடக்கக் கூடாது; முறைசாரா நல வாரியங்களில் நேரடி பதிவை தொடர வேண்டும்; மத்திய தொழிற்சங்கங்களுக்கு லாக் இன் ஐடி வழங்குவதுடன், ஓடிபி நடைமுறையை கைவிட்டு நலவாரிய பதிவு நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்; கரோனா நிவாரணம், நல வாரிய ஓய்வூதியம், நிலுவையிலுள்ள பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் லியுறுத்தப்பட்டன.

இந்தஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் கே.தங்கமோகன் தலைமை வகித்தாா். கட்டுமானத் தொழிலாளா் சங்க மாநில துணைச் செயலா் கே.பி.பெருமாள், மீன் சம்மேளன மாநில பொதுச்செயலா் எஸ்.அந்தோணி ஆகியோா் பேசினா்.

இதில், சிஐடியூ நிா்வாகிகள் எம்.சித்ரா, ஜி.சந்திரபோஸ், வி.சந்திரகலா, ஆலிவா்பிரைட் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மாா்த்தாண்டம் நலவாரிய அலுவலகம் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com