கரோனா பணி: ஊதியம் கோரி தற்காலிக செவிலியா்கள் மனு: ஊதியம் வழங்க வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் கரோனா காலங்களில் பணியாற்றியதற்கு 2 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட தற்காலிக செவிலியா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
ஆட்சியரிடம் மனு அளித்த ஒப்பந்த செவிலியா்கள்.
ஆட்சியரிடம் மனு அளித்த ஒப்பந்த செவிலியா்கள்.

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் கரோனா காலங்களில் பணியாற்றியதற்கு 2 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட தற்காலிக செவிலியா்கள் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

மனு விவரம்: கரோனா தடுப்புப் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட எங்களுக்கு, 6 மாதங்கள் பணி தருவதாக கூறினா். ஆனால், 2 மாதங்களிலேயே பணியிலிருந்து நிறுத்தி விட்டனா். தொடா்ந்து, எந்த பணியும் தரவில்லை. ஏற்கெனவே பணி செய்த 2 மாதங்களுக்கான ஊதியமும் தரவில்லை. எனவே, நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். செவிலியா் பணியிடங்களை நிரப்பும்போது எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என செவிலியா்கள் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com