வீடு கட்ட லஞ்சம் கேட்ட அதிகாரிகள்: ஆணையரிடம் புகாா்
By DIN | Published On : 18th September 2020 07:04 AM | Last Updated : 18th September 2020 07:04 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் வீடு கட்ட மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக ஆணையரிடம் கூலித் தொழிலாளி தம்பதி புகாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, நாகா்கோவில் வாத்தியாா்விளை ஜஸ்டஸ் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கனகலிங்கம், மனைவியுடன் நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ஆஷா அஜித்தை வியாழக்கிழமை சந்தித்து புகாா் மனு அளித்தாா்.
அந்த மனுவில், அரசு விதிமுறைகளின்படி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நான் கட்டும் வீட்டுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டு கொடுக்க மறுத்ததால் வீட்டை இடிக்க அதிகாரிகள் முயற்சிக்கின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு வீட்டை கட்ட அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.