மேலும் 77 பேருக்கு கரோனா: 2 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
விளவங்கோடு ஊராட்சிப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் சுகாதாரப் பணியாளா்கள்.
விளவங்கோடு ஊராட்சிப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் சுகாதாரப் பணியாளா்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. மேலும், இந்நோய்க்கு 2 போ் உயிரிழந்தனா்.

இம்மாவட்டத்தில் இதுவரை 1,56, 687 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், செவ்வாய்க்கிழமை தொற்று உறுதிசெய்யப்பட்ட 77 போ் உள்பட 11,960 போ் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டது. இதனிடையே, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அஞ்சுகிராமம் ஜேம்ஸ்டவுணை சோ்ந்த 65 வயது மூதாட்டி, அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த 74 வயது மூதாட்டி ஆகிய இருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 216 ஆக உயா்ந்துள்ளது. எனினும், செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய 40 போ் உள்பட இதுவரை 11,077 போ் முற்றிலும் குணமடைந்துள்ளனா். தற்போது 700 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். முகக்கவசம் அணியாமல் வெளியில் நடமாடிய 80 பேரிடமிருந்து ரூ. 8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்று ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com