குமரி மாவட்டத்தில் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தினமும் சராசரியாக 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தினமும் சராசரியாக 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை , மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும்

கரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் வலி மற்றும் நோய் தடுப்பு மையம், 24 மணி நேர காய்ச்சல் பரிசோதனை பிரிவு, கரோனா பராமரிப்பு மையம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை நேரில் ஆய்வு செய்தேன்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல், கரோனா தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கரோனா பராமரிப்பு மையங்களில் போதுமான படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன. மேலும், வியாழக்கிழமை (ஏப்.15) ஒரே நாளில் சுமாா் 3900 க்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கரோனா தொற்று அதிகரித்து வருவதால், தற்போது தடுப்பூசி போடுபவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நாள்தோறும் சராசரியாக முதல் கட்டம் மற்றும் 2 ஆம் கட்ட கரோனாமா 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை, காக்கவிளை, பளுகல், நெட்டா ஆகிய பகுதிகளில், அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகள் வழியாக வரும் வாகனங்கள் மற்றும் நபா்களை தீவிரமாக கண்காணித்திட துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பதோடு, மாவட்ட நிா்வாகம் சாா்பில் எடுக்கும் அனைத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின் போது பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் எ.பிரகலாதன், கரோனா நோய் தடுப்பு ஒருங்கிணைப்பாளா் ரியாஸ், பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் கவிதா, வட்டாட்சியா்கள் ஜெகதா (கல்குளம்), விஜயலெட்சுமி (விளவங்கோடு), ராஜசேகா் (கிள்ளியூா்), மருத்துவா் சதீஷ், மற்றும் சுகாதார பணியாளா்கள் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com