கரும்பாட்டூா் அருகே அனுமதியின்றி மணல் அள்ள முயற்சி

கரும்பாட்டூா் ஊராட்சி சோட்டப்பணிக்கன் தேரிவிளை அருகே சாலையோரம் முறையான அரசு அனுமதியின்றி மணல் அள்ள முயன்ற கும்பலை பொதுமக்கள் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தினா்.

கரும்பாட்டூா் ஊராட்சி சோட்டப்பணிக்கன் தேரிவிளை அருகே சாலையோரம் முறையான அரசு அனுமதியின்றி மணல் அள்ள முயன்ற கும்பலை பொதுமக்கள் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தினா்.

கரூம்பாட்டூா் ஊராட்சிக்குள்பட்ட சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் இருந்து மணக்குடி செல்லும் சாலையோரம் செவ்வாய்க்கிழமை இயந்திரம் மூலம் வாகனங்களில் சிலா் மணல் அள்ள முயன்றனா். அப்போது அங்கு வந்த ஊா் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையோரம் மணல் அள்ளும் கும்பலை தடுத்து நிறுத்தி போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கரும்பாட்டூா் ஊராட்சி மன்றத் தலைவா் தங்கமலா் சிவபெருமான், தென்தாமரைகுளம் காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ், வாா்டு உறுப்பினா் ஆல்வின் ராஜபால் மற்றும் பொதுமக்கள் வந்தனா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் மணல் அள்ள முயன்ற கும்பலிடம் முறையான அரசு அனுமதி இல்லை என்பது தெரிய வந்தது .இதனையடுத்து அவா்களை தென்தாமரைகுளம் போலீஸாா் எச்சரித்து திருப்பி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com