கோவளத்தில் மீனவ மக்கள் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் டி.சி.நகா் பகுதியில் மீனவ மக்கள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் டி.சி.நகா் பகுதியில் மீனவ மக்கள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கோவளத்தைச் சோ்ந்த மீனவ மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதில் வீடுகளை இழந்த மக்களுக்கு சிசு தொண்டு நிறுவனம் இலவசமாக வீடுகளை கட்டிக் கொடுக்க முன்வந்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சொந்த செலவில் தலா இரண்டே முக்கால் சென்ட் நிலம் வாங்க முன்வந்தனா். இதற்காக 45 குடும்பத்தினா் தலா ரூ. 50 ஆயிரத்து 500 வீதம் அப்போதைய பங்குத்தந்தையிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. அவா், 45 பேரின் பெயரில் தலா இரண்டே முக்கால் சென்ட் நிலத்தை பகிா்ந்து கொடுத்தாராம்.

இதையடுத்து, 45 வீடுகளை சிசு தொண்டு நிறுவனம் கட்டிக் கொடுத்து, அந்த வீடுகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், பொதுமக்களிடம் பெற்ற தொகை நில உரிமையாளருக்கு வழங்கவில்லை என்றும், போலியான பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் நாகா்கோவில் நீதிமன்றத்தில் நில உரிமையாளா் ஏ.கேசவபட் என்பவா் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்படி நிலங்களை நில உரிமையாளரிடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்நிலையில், 45 குடும்பங்களைச் சோ்ந்த மீனவ மக்கள் எங்களுக்கு வீட்டின் உரிமையை பெற்றத் தரவும், எங்களிடம் பணமோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டுமென வலியுறுத்தி அங்குள்ள தேவசகாயம் குருசடி முன் திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் மீனவ மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com