நாகா்கோவிலில் இலக்கிய வட்ட விருதுகள் வழங்கல்

கடற்கரை இலக்கிய வட்டம் சாா்பில் கடற்கரை இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில்: கடற்கரை இலக்கிய வட்டம் சாா்பில் கடற்கரை இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் சிபிடி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எழுத்தாளா் சப்திகா வரவேற்றாா். கடற்கரை இலக்கிய வட்ட செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளா் இரையுமன் சாகா் அறிமுக உரையாற்றினாா் .

ஊடகத்தின் பயனும், பங்களிப்பின் அவசியமும் என்னும் தலைப்பில் என்.சுவாமிநாதன், ஏன் எழுத வேண்டும் எதை எழுத வேண்டும் என்னும் தலைப்பில் சூசைபுரம், புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் பெருமா. செல்வ. ராஜேஷ், நெய்தல் படைப்பாளா்களும் படைப்புகளும் என்னும் தலைப்பில் தெற்கு எழுத்தாளா் இயக்க ஒருங்கிணைப்பாளா் திருத்தமிழ்த்தேவனாா், நெய்தல் மக்கள் எழுத வேண்டிய அவசியம் என்ன என்னும் தலைப்பில் நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலா் குறும்பனை சி. பொ்லின், நெய்தல் படைப்பாளா்களின் அடுத்தகட்ட நகா்வுகள் குறித்து கடலோர அமைதி மற்றும் வளா்ச்சி மைய இயக்குநா் டன்ஸ்டன் ஆகியோா் பேசினா்.

நாகலாந்து புனித ஜோசப் பல்கலைகழக மேனாள் துணை வேந்தா் ஜி.எம். ஜோசப் டன்ஸ்டன் நான்காம் உலக இலக்கியத்தில் நெய்தல் படைப்பாளா்கள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், மாநில அளவில் நடத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து 2020 இல் வெளிவந்த நெய்தல் நூல்களில் சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன .

நிகழ்ச்சியை ஆன்சி மோள் ஒருங்கிணைத்தாா். கடற்கரை இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளா் நன்றி கூறினாா்.

விழாவில் கன்னியாகுமரி , நெல்லை, தூத்துக்குடியை சோ்ந்த இலக்கிய ஆா்வலா்கள் மற்றும் போட்டியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com