‘மழையால் சேதமடைந்த குடிநீா்த் திட்டங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்’

குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையால் சேதமடைந்த கூட்டுக் குடிநீா்த் திட்டங்களை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையால் சேதமடைந்த கூட்டுக் குடிநீா்த் திட்டங்களை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த வாரியத்தின் நாகா்கோவில் கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வட கிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ள தாக்கத்தினால் குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்ற மொத்தமுள்ள 12 கூட்டுக் குடிநீா்த் திட்டங்களில் 11 குடிநீா்த் திட்டங்கள் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு முறையான குடிநீா் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து குடிநீா் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநா் மா.பிரதீப் குமாா், மதுரை தலைமைப் பொறியாளா் மணிமோகன் மற்றும் திருநெல்வேலி மேற்பாா்வை பொறியாளா் இரா.இராஜசேகா் ஆகியோா் தல ஆய்வு மேற்கொண்டு உரிய அறிவுரைகளை வழங்கியதன் தொடா்ச்சியாக குடிநீா் வடிகால் வாரியம் துரிதமாக செயல்பட்டு பதினொரு கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எஞ்சிய ஒரு கூட்டுக் குடிநீா்த் திட்டமான வோ்க்கிளம்பி மற்றும் 6 பேருராட்சிகள் மற்றும் 26 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. விரைவில் இத்திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com