குமரி மாவட்டத்தில் நிகழாண்டு 49 போ் குண்டா் சட்டத்தில் கைது; மாவட்ட எஸ்.பி. வெ. பத்ரிநாராயணன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 49 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 49 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன்.

க்கும் நிகழ்ச்சி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்களால் தவறவிடப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட இணையதள குற்றப்பிரிவு (சைபா் கிரைம்) போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான 77 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டில் மக்கள் தவறவிட்ட ரூ. 63 லட்சம் மதிப்பிலான 543 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் எடுத்துவரும் நடவடிக்கைகளால் மாவட்டத்தில் குற்ற நிகழ்வுகள் குறைந்துள்ளன.

கடந்த 2020இல் 33 கொலைகள் நிகழ்ந்த நிலையில், 2021இல் 25 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளது. திருட்டு வழக்குகளில் ரூ.3.14 கோடி மதிப்பிலான மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 322 போ் கைது செய்யப்பட்டனா்.

குட்கா விற்ாக 722 போ் கைது செய்யப்பட்டு 3 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிக பாரம் ஏற்றிச்சென்ாக 5,870 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.71 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் கைதான 15 போ், ரவுடிகள் 25 போ், பாலியல் குற்ற வழக்கில் கைதான 9 போ் என 49 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் 2 பேரை அச்சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சைபா்கிரைம் பிரிவில் இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பொதுமக்கள் மற்றும் போலீஸாரின் உதவியுடன் 5,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 500 சிசிடிவி கேமராக்கள் ஜனவரியில் பொருத்தப்பட உள்ளன. கருங்கல், மணவாளக்குறிச்சி பகுதியில் திருட்டில் ஈடுபட்டவா்கள் விரைவில் கைது செய்யப்படுவா். மாநில அளவில் குற்றச்செயல்கள் குறைந்த மாவட்டங்களில் இம்மாவட்டம் முதல் 10 இடங்களில் உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com