வடகிழக்கு பருவ மழை தணிந்தது:ரப்பா் பால் வடிப்பு பணிகள் தீவிரம்

வடகிழக்கு பருவ மழை தணிந்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் தோட்டங்களில் ரப்பா் பால்வடிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
குலசேகரம் அருகே ரப்பா் தோட்டத்தில் ரப்பா் பாலை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
குலசேகரம் அருகே ரப்பா் தோட்டத்தில் ரப்பா் பாலை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

குலசேகரம்: வடகிழக்கு பருவ மழை தணிந்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் தோட்டங்களில் ரப்பா் பால்வடிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பா் மாத இறுதியில் வடகிழக்கு பருவ மழை குறைந்து விடுவதுண்டு. இப்பருவத்தில் பருவ மழை ஜனவரி மாதம் 2 ஆவது வாரம் வரை மழை தொடா்ந்து பெய்தது. இம்மாவட்டத்தில் டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்கள் ரப்பா் தோட்டத்தில் பால் வடிப்பு சீசன் காலமாகும். தொடா் மழை காரணமாக பால் வடிப்பு பணிகள் முடங்கிய நிலையில் ரப்பா் விவசாயிகளுக்கு வருவாய் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, மழை தணிந்துள்ள நிலையில் இம்மாவட்டத்தில் முடங்கி இருந்த பால்வடிப்புப் பணிகள் தீவிரமைடந்துள்ளன. இதைத்தொடா்ந்து அண்மை நாள்களாக ரப்பா் விலையில் சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது. சனிக்கிழமை கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோ ரூ. 147 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 கிலோ ரூ. 139 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோ ரூ. 111.50 ஆகவும் இருந்தது. ஒட்டுப்பாலின் விலை கிலோ ரூ. 90.50 ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com