தெப்பக்குளத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை

மழை, வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்து குமரி மாவட்ட தீயணைப்புத்துறையினா் சுசீந்திரம் கோயில் தெப்பக்குளத்தில் செயல் விளக்கம் செய்து காட்டினா்.
தெப்பக்குளத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை

மழை, வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்து குமரி மாவட்ட தீயணைப்புத்துறையினா் சுசீந்திரம் கோயில் தெப்பக்குளத்தில் செயல் விளக்கம் செய்து காட்டினா்.

குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு உத்தரவின் பேரில் நாகா்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அதிகாரி பெனட் தம்பி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினா். தண்ணீா் பாட்டில், தொ்மாகோல் போன்ற பொருள்களை மிதவைகளாக பயன்படுத்தி தப்பிப்பது எப்படி என ஒத்திகை செய்துகாண்பித்தனா். வெள்ளப்பெருக்கு நேரத்தில் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு கயிறு மூலம் பொதுமக்களை மீட்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com