காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

குமரி மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் தொடங்கப்பட்டது.
கரோனா விழிப்புணா்வுப் பிரசாரத்தை தொடங்கிவைக்கிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாத்.
கரோனா விழிப்புணா்வுப் பிரசாரத்தை தொடங்கிவைக்கிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாத்.

குமரி மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் தொடங்கப்பட்டது.

கரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவது, ஆங்காங்கே கூட்டம் சேருவது போன்றவற்றை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறாா்.

மேலும், காவல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு வாகனம் மூலம் விழிப்புணா்வுப் பிரசாரம் செய்ய உத்தரவிட்டாா்.

நாகா்கோவில் வடசேரி சந்திப்பில் இந்த பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியது: முன்களப் பணியாளா்களான காவல் துறையினா் மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தாலும், விழிப்புணா்வுப் பிரசாரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும்போது மக்கள் பெரிதும் உணா்வாா்கள். தேவையில்லாமல் வெளியே வரமாட்டாா்கள் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து நாகா்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை ஆகிய உள்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் முக்கிய பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com