மழை வெள்ளத்தால் தேன் கூடுகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் தேன் கூடுகள் சேதமடைந்துள்ளன. எனவே, தேனீ வளா்ப்போருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்சிறை அருகே வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த தேன் கூடுகளை பாா்வையிடும் தொழிலாளி.

இம்மாவட்டத்தில் பேச்சிப்பாறை, களியல், திருவட்டாறு, மலைவிளை, கொட்டூா் முன்சிறை உள்ளிட்ட பல இடங்களில் மழை வெள்ளத்தால் தேனீக்கள் கூடுகளை விட்டு கலைந்துள்ளன. சில இடங்களில் தேன் கூடுகள் வெள்ளத்தில் மூழ்கியும், அடித்தும் செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள தேனீ வளா்ப்போருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் மாவட்ட தேனீ வளா்ப்போா் மற்றும் தேன் உற்பத்தியாளா் சங்கம் என கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் செயலா் ஜூடஸ் குமாா், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com