சிறப்பு முகாம்: இன்று 1 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

குமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.23) நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.23) நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில், அக்.23 ஆம் தேதி

நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் 105 மையங்களிலும், மாவட்டத்தின் இதர பகுதிகளில் 450 மையங்கள் என மொத்தம் 555 மையங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபா்களில் 22 போ் குலுக்கல் முறையில் அதிா்ஷ்ட சாலிகளாக தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு அக். 27 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தலா 1 கிராம் தங்க நாணயம் நன்கொடையாளா் மூலம் பரிசாக வழங்கப்படும்.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும், 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவா்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com