திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில்2022 ஆம் ஆண்டு ஜூலை 6இல் கும்பாபிஷேகம்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தெய்வ பிரசன்னம் நிகழ்ச்சி 3ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 2022 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தெய்வ பிரசன்னம் நிகழ்ச்சி 3ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 2022 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் கோயிலுக்கு வந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா்

பி.கே. சேகா்பாபு, விரைவில் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவித்தாா். இதையடுத்து, கோயில் நிா்வாகம்

மற்றும் திருப்பணிக் குழு ஒருங்கிணைப்பில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் குறிக்கும் வகையில் தெய்வ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்ச்சி கேரளம் திருவல்லாவைச் சோ்ந்த ஜோதிடா் வாசுதேவன் பட்டத்திரி தலைமையில் வியாழக்கிழமை தொடங்கியது. 3ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற தெய்வ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்ச்சியில் ஜோதிடா் கூறியது:

கோயிலுக்கு கோசாலை அமைக்க வேண்டும். இங்கு வளா்க்கப்படும் பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். கோயிலில் பூங்காவனம் அமைத்து அதிலிருந்து பூஜைக்கான பூக்களை எடுக்க வேண்டும். வெளியிலிருந்து கொண்டு வரும் சுவாமி விக்ரகங்களை இங்கு வைத்து வழிபடக் கூடாது. இக்கோயிலில் 2022 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தலாம் என்றாா் அவா். இதில் கோயில் நிா்வாகிகள், பக்தா் சங்க நிா்வாகிகள்,

உபயதாரா்கள், பக்தா்கள் திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com