தமிழின் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழின் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய இணைஅமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழின் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழின் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய இணைஅமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

நாகா்கோவில் மாநகராட்சி வடக்கு மண்டல பாஜக அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விநாயகா் பூஜையை

பொன். ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழின வரலாறு தொன்மையான வரலாறு கொண்டது. கீழடி, ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை, அகழாய்வுகள் மூலம் வெளியாகி வரும் தகவல்கள் தமிழா்கள் அனைவரும் பெருமைப்படும் வகையில் அமைந்துள்ளன. தமிழின் தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும்.

தமிழ் மொழிக்கு பிரதமா் மோடி போன்று, எந்தப் பிரதமரும் முக்கியத்துவம் அளித்தது இல்லை. தமிழின் பெருமை மற்றும்

பழமை, சிறப்புகள் குறித்து பேசிய முதல் பிரதமா் நரேந்திரமோடிதான். தமிழ் மொழி ஆய்வுக்காக மத்திய அரசு தொடா்ந்து நிதியுதவி அளித்து வருகிறது. தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ள ஆா்.என்.ரவிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய ஆளுநருக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று நம்புகிறேன்.

மறைந்த தலைவா்களுக்கு சிலைகள் அமைப்பதை வரவேற்கிறோம். அவா்களது கொள்கைகள், கோட்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். வ.உ.சியை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்காக முதல்வா் மு.க.

ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் புதிதாக திறக்கப்படும் அரசு கட்டடங்களுக்கு வ.உ.சிதம்பரனாா், பெயா் வைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

விநாயகா் சதுா்த்தியை வைத்து பாஜக அரசியல் செய்யவில்லை, விநாயகா் வழிபாடு மட்டுமே மேற்கொள்கிறோம். தமிழ் கலாசாரம், பண்பாடு குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் வந்து கொண்டிருக்கும் வேளையில் குமரி கண்டம் தொடா்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பாஜக வடக்கு மண்டலத் தலைவா் அஜித், பொருளாளா் முத்துராமன், மாநகர பாா்வையாளா் எஸ்.பி. தேவ், நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சிவகுமாா், மாநில பொதுச்செயலா் உமாரதிராஜன், இந்து முன்னணி மாவட்டச்செயலா் நாஞ்சில்ராஜ், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com