திற்பரப்பு அருவி மேம்பாட்டு திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

திற்பரப்பு அருவியில் மேம்பாட்டுப் பணிகள் செய்வது தொடா்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திற்பரப்பு அருவி மேம்பாட்டு திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

திற்பரப்பு அருவியில் மேம்பாட்டுப் பணிகள் செய்வது தொடா்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திற்பரப்பு அருவியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்ததையடுத்து, அமைச்சா்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து புதிய இணைப்பு சாலை அமைப்பது, வாகன நிறுத்தம் பகுதியை விரிவாக்கம் செய்வது போன்றவற்றுக்கு பொதுப்பணித் துறை சாா்ந்த இடங்களை உட்படுத்தி வருவதால் இதற்கான சாத்திய கூறுகளை பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் வசந்தி ஆய்வு செய்தாா்.

இதில், உதவி கோட்ட பொறியாளா் கிங்சிலி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் நாகூா்மீரான், பேரூராட்சி செயல் அலுவலா் பூங்கொடி முருகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கூறியது: இங்கு ஏற்கெனவே கால்வாயின் மேற்பரப்பை மூடி, வாகன நிறுத்தும் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக கால்வாய் பாயும் பகுதியை வாகன நிறுத்தும் பகுதிக்காக எடுப்பதற்கு சிக்கல்கள் உள்ளன. எனவே, வாகனங்கள் நிறுத்தும் இடத்துக்கு மாற்று இடத்தை கண்டறிவது அவசியமாகும் என்றாா் அவா்.

ரூ.1.96 கோடியில் வளா்ச்சிப் பணி: பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் நாகூா்மீரான் அருவியின் உள்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியது: திற்பரப்பு அருவி பகுதியிலுள்ள கழிப்பறைகளை சீரமைப்பது, மின்விளக்குகள் அமைப்பது உள்பட ரூ. 1.96 கோடியில் மேம்பாட்டு பணிகள் செய்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com