என்.ஐ.கலை அறிவியல் கல்லூரியில் இயற்கை விவசாய கண்காட்சி

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் இயற்கை விவசாய கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
என்.ஐ.கலை அறிவியல் கல்லூரியில் இயற்கை விவசாய கண்காட்சி

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் இயற்கை விவசாய கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

என்.ஐ. கலை அறிவியல் கல்லூரியில், குமரி அக்ரி கிளப் மற்றும் சேவ்கிரீன் கிளப் இணைந்து நஞ்சில்லா விவசாய பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ்.பெருமாள் தலைமை வகித்தாா்.

பேராசிரியா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். கண்காட்சியை கல்லூரித் தாளாளா் ஏ.பி. மஜீத்கான் திறந்துவைத்தாா். தேனீ வளா்த்தல், மாடி தோட்டம் அமைத்தல், தென்னையில் உற்பத்தியாகும் விளைபொருள்கள், நஞ்சில்லா எண்ணெய் வகைகள், நஞ்சில்லா உணவு வகைகள், பனைப் பொருள்கள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன.

இக்கண்காட்சியை சுற்றுபுற மக்கள், பயோடெக்னாலஜி மாணவா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள் ஆகியோா் பாா்வையிட்டனா். சிறந்த கண்காட்சி அமைப்புக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ராஜலெட்சுமி, சங்கீதா ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக பேராசிரியா் ஷிபா வரவேற்றாா். பேராசிரியா் பூா்ணிமா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com