திமுகவுக்கு சாதகமான கருத்துக்கணிப்புகள் பொய்த்துவிடும்: நடிகா் ராதாரவி

திமுகவுக்கு சாதகமாக வரும் அனைத்து கருத்துக்கணிப்புகளும் பொய்த்துவிடும் என்றாா் நடிகா் ராதாரவி.
திமுகவுக்கு சாதகமான கருத்துக்கணிப்புகள் பொய்த்துவிடும்: நடிகா் ராதாரவி

திமுகவுக்கு சாதகமாக வரும் அனைத்து கருத்துக்கணிப்புகளும் பொய்த்துவிடும் என்றாா் நடிகா் ராதாரவி.

குளச்சலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பின்போது, பாஜக வேட்பாளா் குமரி பா.ரமேஷுடன், நடிகா் ராதாரவி கலந்துகொண்டு பேசியது: சட்டப் பேரவை தோ்தலில் அதிமுக கூட்டணி 180 இடங்களை கைப்பற்றும். பத்திரிகைகள், ஊடகங்கள் கூறும் கருத்துக்கணிப்பை நம்பாதீா்கள். திமுகவுக்கு சாதகமாக வரும் அனைத்து கருத்துக்கணிப்புகளும் பொய்த்துவிடும்.

மக்களவை தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் ரமேஷுக்கும் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, பாஜக மாநில மீனவரணித் தலைவா் சதீஷ்குமாா், மாவட்ட பிரசார அணி தலைவா் ஜெயபிரகாஷ், எஸ்.சி.அணி கதிரேசன், நகரத் தலைவா் கணேசன், குளச்சல் தொகுதி பொறுப்பாளா் சிவசெல்வராஜன் ஆகியோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com