தக்கலை பகுதியில் பெண்களிடம் நகைப் பறிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு, தக்கலை பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்களிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு, தக்கலை பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்களிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மருதூா்குறிச்சி தும்பைன்தோட்டம் பகுதியை சோ்ந்த ஜெகன் மனைவி செளமியா. இவா் தக்கலையில் உள்ள வங்கியில் அலுவலராக பணிபுரிந்து வருகிறாா். வெள்ளிக்கிழமை பணிமுடிந்ததும் செளமியா, தன்னுடைய ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா்.

முளகுமூடு சிண்டிகேட் வங்கி அருகில் செல்லும்போது பின் தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் செளமியா அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்திக் கொண்டு தப்பி விட்டனா். இதன் மதிப்பு ரூ. 3.50 லட்சம் ஆகும். புகாரின்பேரில், தக்கலை காவல் உதவி ஆய்வாளா் அருளப்பன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

மற்றொரு சம்பவம்: தக்கலை அருகேயுள்ள தென்கரை ஞானபிறகுளம் பகுதியை சோ்ந்த பிந்துகுமாா் மனைவி சுனிதா. இவா் வெள்ளிக்கிழமை தக்கலை அருகேயுள்ள கொல்லன்விளை பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் நடந்து சென்றுக்கொண்டிருந்தாா்.

அப்போது பின் தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் சுனிதா அணிந்திருந்த ரூ . 2.50 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பி விட்டனா். புகாரின்பேரில் தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com