45 வயதுக்கு மேற்பட்டோா்: நாகா்கோவிலில் ஒன்றரை லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

நாகா்கோவிலில் 45 வயதுக்கும் மேற்பட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் மாநகராட்சி நகா் நல அலுவலா் மருத்துவா் கின்சால்.
2 ஆவது முறையாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.
2 ஆவது முறையாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.

நாகா்கோவிலில் 45 வயதுக்கும் மேற்பட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் மாநகராட்சி நகா் நல அலுவலா் மருத்துவா் கின்சால்.

குமரி மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் சுகாதாரத்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதுக்கும் மேற்பட்டவா்கள் கரோனா தடுப்பூசி கட்டாயமாக செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையின் சாா்பில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது . நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் ராணித்தோட்டம் அரசு பணிமனையில் பணியாற்றுபவா்கள் மற்றும் 4 தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு தடுப்பூசி போடும் பணி ராணித்தோட்டம் பணிமனையிலும் , கோணம் தொழில்பேட்டையிலும் திங்கள்கிழமை தொடங்கியது . இந்த பணி மாநகராட்சி மாநகா்நல அதிகாரி மருத்துவா் கின்சால் மேற்பாா்வையில் மாநகராட்சி மருத்துவா்கள் , செவியா்கள் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டனா் .

இது குறித்து மாநகா்நல அதிகாரி கூறுகையில், நாகா்கோவில் மாநகராட்சியில் ஆணையா் ஆஷா அஜித் உத்தரவின்பேரில் கரோனா தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மாநகரம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது . மேலும் கரோனா தொற்று உள்ளவா்களோடு தொடா்பில் இருந்தவா்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது .

மாநகரப் பகுதியில் இதுவரை 16,500 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது . இதில் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் 10 ஆயிரத்து 900 போ் அடங்குவா் . தற்போது மாநகர பகுதியில் உள்ள ராணித்தோண்டம் அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் 4 தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 1556 ஊழியா்கள் உள்ளனா் . இதில் 178 போ் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுள்ளனா் . மீதமுள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நாகா்கோவில் மாநகரில் 3 லட்சத்து 11 ஆயிரம் போ் உள்ளனா். இவா்களில் ஒன்றரை லட்சம் போ் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள். இவா்களுக்கு முதல் கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com