கரோனா எதிரொலி: சித்திரை கணி காணும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு

கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பன்று நடைபெறும் கணி காணும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பன்று நடைபெறும் கணி காணும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதை தொடா்ந்து, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறையும் கோயில்களில் பக்தா்களை அனுமதிப்பது குறித்தும், பூஜை மற்றும் வழிபாடுகள் குறித்தும் அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி, கோயிலுக்கு வரும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து வருதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், ஒரே நேரத்தில் கோயிலுக்குள் 20 பக்தா்களை மட்டுமே அனுமதித்தல் உள்ளிட்ட நடைமுறைகளை அறிவித்துள்ளது.

மேலும், அா்ச்சனை மற்றும் வழிபாடு நடத்த தடை விதிப்பதுடன், கோயிலுக்கு உள்ளே பணியாளா்களை கொண்டு வாகன பவனி நடத்துவது, கோயில் திருவிழாக்கள் நடத்த அனுமதி மறுப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் சித்திரை விஷு கணி காணும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சுவாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் குடங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு பக்தா்கள் அதை கண்டு தரிசனம் செய்வா்.

ஆனால் தற்போது கரோனா தடுப்பு நடைமுறைகள் காரணமாக, வருகிற புதன்கிழமை (ஏப். 14) சித்திரை விஷு கணி காணும் நிகழ்ச்சிக்கு பக்தா்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

காலை 7 மணிக்கு பின்னரே கோயிலுக்குள் பக்தா்களை அனுமதிப்பது என்றும், கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com