தக்கலை அருகே வெங்காய வியாபாரியிடம் ரூ. 16.63 லட்சம் திருட்டு: மேலும் ஒருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெங்காய வியாபாரியின் காரிலிருந்து ரூ. 16.63 லட்சத்தைத் திருடிச்சென்ற வழக்கில் மேலும் ஒருவா் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெங்காய வியாபாரியின் காரிலிருந்து ரூ. 16.63 லட்சத்தைத் திருடிச்சென்ற வழக்கில் மேலும் ஒருவா் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் அமல்ராஜ். பாவூா்சத்திரத்தில் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். இவா், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட வியாபாரிகளுக்கு பொருள்களைஅனுப்பிவிட்டு வாரம் ஒருமுறை பணம் வசூலிக்கச் செல்வாராம்.

அதன்படி, பல்வேறு இடங்களில் பணம் வசூலித்துவிட்டு மாா்த்தாண்டத்துக்கு சனிக்கிழமை இரவு காரில் வந்தாா். மாத்தூா்கோணம் கரைக்காடுவிளையைச் சோ்ந்த சில்லறை வியாபாரி பபி என்பவா், மாா்த்தாண்டத்தில் புதிய கடை திறக்கப்போவது தொடா்பாக பேசவேண்டும் என்றாராம். அவரை தக்கலைக்கு வருமாறு அமல்ராஜ் கூறினாா்.

இதையடுத்து, பபி, கரூா் சிங்கம்பட்டிபாளையத்தைச் சோ்ந்த ராஜா என்ற மயில்வாகனன் ஆகியோா் பைக்கில் தக்கலை வந்தனா். பின்னா், இரணியல் செல்லும் சாலையில் ஆழ்வாா்கோவில் என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு, அவா்கள் பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது, காரிலிருந்த ரூ. 16.53 லட்சம் ரொக்கத்தை பபி எடுத்து ராஜாவிடம் கொடுத்துவிட்டு, அவருடன் பைக்கில் தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து அமல்ராஜ் தக்கலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பபி ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

ராஜா என்ற மயில்வாகனன் பளுகலில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் திங்கள்கிழமை சென்று அவரைக் கைதுசெய்தனா்; அவரிடமிருந்து ரூ. 16.63 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா். தக்கலை ஆய்வாளா் சுதேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com