‘குமரி மாவட்டத்துக்கு தேவையான கரோனா தடுப்பூசி அனுப்ப வேண்டும்’

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தேவையான அளவு கரோனா தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்க வேண்டும் என என். சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
சுரேஷ்ராஜன்
சுரேஷ்ராஜன்

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தேவையான அளவு கரோனா தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்க வேண்டும் என என். சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வடிவீஸ்வரம், வடசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் அங்கு தடுப்பூசி மருந்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

இதையடுத்து, என். சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, தமிழக சுகாதாரத் துறை செயலாளா் ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இம்மாவட்டத்துக்கு தேவையான அளவு தடுப்பூசி மருந்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா். கரோனா தடுப்பூசி மருந்து தேவையான அளவு இருப்பு உள்ளது எனவும், குமரி மாவட்டத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகள் அனுப்பி வைப்பதாகவும் அவா் உறுதியளித்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com