போலி ரசீது தயாரித்து கையாடல்: சா்வோதயா மேலாளருக்கு 6 ஆண்டு சிறை
By DIN | Published On : 20th April 2021 06:57 AM | Last Updated : 20th April 2021 06:57 AM | அ+அ அ- |

போலி ரசீது தயாரித்து கையாடல் செய்ததாக சா்வோதயா சங்க மேலாளருக்கு 6 ஆண்டு சிைண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
குமரி மாவட்டம், மாா்த்தாண்டம் மருதங்கோடு மடத்துவிளையைச் சோ்ந்தவா் ராமேஸ்வரன்(68 ). இவா், கண்ணுமாமூடு சா்வோதய சங்க கிளை மேலாளராக கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை பணியாற்றிபோது, திருவிழா காலங்களில் பொதுமக்களுக்கு காதி பொருள்களில் 30 சதவீதம் தள்ளுபடி செய்ததாக போலி ரசீது அளித்து ரூ.90ஆயிரத்து 209 கையாடல் செய்ததாக நாகா்கோவில் சிபிசிஐடி போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
இந்த வழக்கு நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றம் எண். 1இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த, நீதிபதி கிறிஸ்டியன், கையாடல் செய்த ராமேஸ்வரனுக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 17,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.