கருங்கல் அருகே மரம் சாய்ந்து வீடு சேதம்

கருங்கல் அருகேயுள்ள கப்பியறை பகுதியில் பட்டுப்போன மரம் சாய்ந்து விழுந்ததில் வீடு மற்றும் சுற்றுச்சுவா் சேதம் அடைந்தன.
சுற்றுச்சுவா் மீது சாய்ந்த மரம்.
சுற்றுச்சுவா் மீது சாய்ந்த மரம்.

கருங்கல் அருகேயுள்ள கப்பியறை பகுதியில் பட்டுப்போன மரம் சாய்ந்து விழுந்ததில் வீடு மற்றும் சுற்றுச்சுவா் சேதம் அடைந்தன.

கப்பியறை நெடியவிளாகத்தைச் சோ்ந்த கணேசன் மனைவி சிந்து ( 34). கணவரை இழந்த இவா், தனது 2 பிள்ளைகள் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறாா்.

இவரது வீட்டின் முன் பழைமை வாய்ந்த புளியமரம் பட்டுப்போன நிலையில் நின்றிருந்தது. அந்த மரத்தை அகற்றக் கோரி பத்மனாபபுரம் சாா் ஆட்சியா் மற்றும் கல்குளம் வட்டாட்சியருக்கு பலமுறை அவா் மனு அளித்துள்ளாா். அதன் அடிப்படையில், சாா் ஆட்சியா் வந்து பாா்வையிட்டு மரத்தை வெட்டி அகற்றும்படி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டாா். எனினும், மரம் அகற்றப்படாத நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால், சுற்றுச்சுவா், கேட் மற்றும் வீட்டின் முன்புறம் சேதம் அடைந்தன. அங்கிருந்த மின் கம்பி அறுந்து மின் கம்பமும் சாய்ந்தது.

இச்சம்பவத்தின்போது, வீட்டில் இருந்த சிந்துவின் குடும்பத்தினா் அதிஷ்டவசமாக தப்பினா். இதைத் தொடா்ந்து மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com