குமரியில் ரப்பா் விலை தொடா் சரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் விலை தொடா்ந்து சரிவடைந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் விலை தொடா்ந்து சரிவடைந்து வருகிறது.

0ம்மாவட்டத்தில் முக்கிய உற்பத்திப் பொருளான ரப்பரின் விலை கடந்த சில தினங்களாக சரிவடைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 159 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 153 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 135.50 ஆகவும் இருந்தது. கடந்த மாத விலையை ஒப்படும் போது சராசரியாக கிலோவிற்கு ரூ. 8 வரை குறைந்துள்ளது. கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம், பங்குச் சந்தைகள் சரிவு உள்ளிட்ட காரணங்களால் ரப்பா் விலை சரிவடைந்து வருவதாக ரப்பா் வணிகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com