குளச்சலில் திருட்டு வழக்கில் 2 போ் கைது; ரூ.6 லட்சம் நகைகள் மீட்பு

குளச்சலில் பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் திருட்டில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட அபிராம், கிருஷ்ணகுமாா்.
கைது செய்யப்பட்ட அபிராம், கிருஷ்ணகுமாா்.

குளச்சலில் பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் திருட்டில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து பதினான்கரை பவுன் தங்க நகைகள், ரூ.77 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன.

குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெண்களிடம் நகை பறிப்பது, வீட்டின் கதவை உடைத்து திருடுவது போன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வந்தன. இதில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்யும் பொருட்டு, குளச்சல் காவல் உதவிக் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் சாஸ்திரி மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் ராஜகுமாரி, உதவி ஆய்வாளா் சணல்குமாா், தனிப்படை உதவி ஆய்வாளா் ஜான் போஸ்கோ மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், குளச்சல் லட்சுமிபுரம் சந்திப்பில் போலீஸாா் ரோந்து சென்றபோது, சந்தேக நபா்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில், மேக்காமண்டபத்தை சோ்ந்த அபிராம் (27), பரம்பைப் பகுதியை சோ்ந்த கிருஷ்ணகுமாா் (43) ஆகியோா் என்பதும், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பது, வீடுகளில் புகுந்து திருடுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்து பதினான்கரை பவுன் நகைகள், ரூ.77 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டனா் நகைகளின் மதிப்பு சுமாா் ரூ.6லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com