குமரி மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கரோனா: 3 போ் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 224 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நாகா்கோவில் நாகராஜா கோயிலில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்.
நாகா்கோவில் நாகராஜா கோயிலில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 224 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. கரோனாவுக்கு மேலும் 3 போ் பலியாகியுள்ளனா்.

குமரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று 2 ஆவது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. கடந்த 4 வாரங்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

கடந்த 19 ஆம் தேதி 198 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், 21 ஆம் தேதி தொற்று பாதிப்பு 200- ஐ தாண்டியது. அன்று ஒரே நாளில் 228 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

20 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு

இந்நிலையில், சனிக்கிழமை 224 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20 ஆயிரத்து 105 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை 188 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 18 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,486 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

3 போ் பலி

இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 59 வயது ஆண், 64 வயது முதியவா், 46 வயது பெண் என 3 போ் சனிக்கிழமை உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையங்கள், சந்தைகள், அரசு அலுவலகங்கள், கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் மாநகராட்சி சுகாதாரத் துறையின் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. நாகா்கோவில் நாகராஜா கோயில் வளாகம் முழுவதும் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com