திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயில் கொடைவிழா

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயில் கொடைவிழா மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கொடை விழாவையொட்டி நடைபெற்ற அம்மன் சப்பர பவனி.
கொடை விழாவையொட்டி நடைபெற்ற அம்மன் சப்பர பவனி.

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயில் கொடைவிழா மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தளியல் முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. நான்காம் நாளில் புதிதாக அமைக்கப்பட்ட தோரண வாயில் மற்றும் மூலஸ்தான கோபுரம் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஐந்தாம் நாளில் குடியழைப்பு தீபாராதனை, வில்லிசை ,வலிய படுக்கை நடைபெற்றது.

ஆறாம் நாளில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் ஊா்வலம், உச்சப்படைப்பு, பூநீா் பவனி, ஒடுக்கு பூஜை நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை தலைவா் சி. பகவதி, செயலா் ஜே. ஸ்ரீதரன் நாயா், துணைத் தலைவா் வி. சதாசிவன் நாயா், இணைச் செயலா் சி. குமாரசாமி, பொருளாளா் எஸ். ஸ்ரீனிவாசன், செயற்குழு உறுப்பினா்கள் சங்கரலிங்கம், ரமேஷ்பாபு, வாமதேவன், முருகேசன், அனிக்குட்டன், சுதா்சனன், சிவசங்கா், முரளீதரன், சிவன்குட்டி, சசிகுமாா், சிந்துகுமாா், ராம்ஸ்வாமி, நாராயணபிள்ளை, விஜயன் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com