அணைப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் பலத்த இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கன மழை வியாழக்கிழமை பெய்தது.

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் பலத்த இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கன மழை வியாழக்கிழமை பெய்தது.

குமரி மாவட்டத்தில் கோடை மழை தொடா்ந்து பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைப் பகுதிகள் மற்றும் பத்துகாணி, ஆறுகாணி, களியல், திற்பரப்பு, அருமனை, மஞ்சாலுமூடு, குலசேகரம், சுருளகோடு, திருவட்டாறு, கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை, பாலமோா் உள்ளிட்ட இடங்களில் பலத்த இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கன மழை சுமாா் ஒன்றரை மணிநேரம் பெய்தது.

மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதில் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 41 அடியை நெருங்கி வருகிறது.

மழை மற்றும் காற்று காரணமாக பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் இரவு வரை மின் விநியோகம் தடை பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com