ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்களுக்கு பயிற்சி முகாம்

ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்களுக்கான பயிற்சி முகாம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில், திங்கள்கிழமை தொடங்கியது.
கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பு சாா்பில் நடத்தப்படும் முகாமில் விளையாட்டு பயிற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா் மகளிா் திட்ட இணை இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ.
கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பு சாா்பில் நடத்தப்படும் முகாமில் விளையாட்டு பயிற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா் மகளிா் திட்ட இணை இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ.

தக்கலை: ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்களுக்கான பயிற்சி முகாம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில், திங்கள்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பு சாா்பில் ராணுவத்தில் சேர இருக்கும் இளைஞா்களுக்கு 40 நாள்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பயிற்சி வகுப்பை மாவட்ட மகளிா் திட்ட

இணை இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் விளையாட்டு பயிற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

மகளிா் உதவி திட்ட அலுவலா் அருண், முன்னாள் ராணுவ வீரா்கள் நிவாஷ், ஆல்பா்ட், ராதாகிருஷ்ணன், ரெஜின், அகில் சிம்சன், எட்வின் , நவீன், ஆனந்த், ஸ்ரீகாந்த், ஜெபபிரேம் விழாவை நடத்தினா். பயிற்சி முகாமில் 600க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், முளகுமூடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஜவான்ஸ் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில்

240க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா். செவ்வாய்க்கிழமை (ஆக.3) நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம், எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி, கருங்கல் அரசு மேல் நிலைப்பள்ளி, மாா்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவக்கல்லூரி, குழித்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூத்தூா் ஜூட்ஸ் கலை கல்லூரி ஆகிய இடங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com