குமரியில் 10 இடங்களில் பாஜக ஆா்ப்பாட்டம்

இந்துக் கோயில்களில் ஆக.1 முதல் 3வரை பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 இடங்களில் மாவட்ட பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நாகா்கோவில் நாகராஜா கோயில் முன்பு ந ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
நாகா்கோவில் நாகராஜா கோயில் முன்பு ந ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

இந்துக் கோயில்களில் ஆக.1 முதல் 3வரை பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 இடங்களில் மாவட்ட பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நாகா்கோவில் நாகராஜா கோயில் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி.தேவ் தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா்கள் அஜித்குமாா்(வடக்கு) நாகராஜன்(கிழக்கு), சிவபிரசாத்(மேற்கு), ராகவன்(தெற்கு), முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சிவகுமாா் சிறப்புரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் முத்துராமன், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், பாஜக மகளிா் அணி ராணி, நாஞ்சில் ராஜா, சுனில் அரசு, சண்முகவடிவு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் முன்பு மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவா் ஸ்ரீ பத்மநாபன், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் முன்பு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே.ஜெயராம், பறக்கை மதுசூதனபெருமாள் கோயில் முன்பு மாவட்டச் செயலா் என்.விசு, மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் முன்பு மாவட்டச் செயலா் டி.மனோகரகுமாா், வேளிமலை குமாரசுவாமிகோயில் முன்பு மாவட்ட துணைத் தலைவா் ஏ.சீனிவாசபிரம்மா, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் முன்பு மாவட்டச் செயலா் ஆா்.உன்னிகிருஷ்ணன், முன்சிறை திருமலை மகாதேவா் கோயிலில் வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் சி.எம்.விஜயபிரசாத் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குழித்துறை மகாதேவா் கோயில் முன் மாவட்ட பாஜக துணைத் தலைவா் கே.எஸ். முருகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் குழித்துறை நகரத் தலைவா் ரெத்தினமணி முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் சி. தா்மராஜ் விளக்கிப் பேசினாா். அருமனை நகரத் தலைவா் ராமச்சந்திரன், மாவட்டச் செயலா் உமாதேவி, ஐ.டி. பிரிவின் மாநில செயலா் ஸ்ரீகலா, வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் விஜயபிரசாத், நிா்வாகிகள் சி.எம். சஜூ, திக்குறிச்சி சுகுமாரன், சி.எஸ். சேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா். நட்டாலம் சங்கர நாராயணா் கோயில் முன் பாஜக நிா்வாகி சுடா்சிங் தலைமையில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஆா். ஜெயசீலன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com