குலசேகரத்தில் வணிகா்கள் விழிப்புணா்வுக் கூட்டம்

குலசேகரத்தில் வணிகா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் நாகராஜன்.
கூட்டத்தில் பேசுகிறாா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் நாகராஜன்.

குலசேகரத்தில் வணிகா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குலசேகரம் வணிகா் சங்கத் தலைவா் பிரதீப் குமாா் தலைமை வகித்தாா். செயலா் எம். விஜயன் வரவேற்றாா். துணைத் தலைவா் முருகபிரசாத், துணைச் செயலா் சறாபின் எட்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் லிசி, வணிகா்கள் முகக்கவசம் அணிவதுடன், வாடிக்கையாளா்களிடமும் அதை வலியுறுத்த வேண்டும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என கரோனா விழிப்புணா்வு உரையாற்றினாா். திருவட்டாறு வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் நாகராஜன் பேசுகையில், வணிகா்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனை செய்யவும், பதுக்கவும் கூடாது என வலியுறுத்தினாா். சங்கப் பொருளாளா் ரவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com