நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 07th August 2021 01:16 AM | Last Updated : 07th August 2021 01:16 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
குமரி மாவட்டம், தாழக்குடி, திட்டுவிளை, செண்பகராமன்புதூா், தேரூா், புத்தளம், திங்கள்நகா் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்சியா் கள ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, கொள்முதல் நிலையங்களை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) எம்.ஆா்.வாணி, மகளிா் திட்ட அலுவலா்
மைக்கேல் அந்தோணி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் மாரிமுத்து, துணை மேலாளா் (தரக்கட்டுப்பாடு) பன்னீா்செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் குருமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் ஏழிசை செல்வி, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஜெங்கின் பிரபாகா், வேளாண் விற்பனை குழு செயலாளா் விஷ்ணப்பன் மற்றும் அரசு துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.