தேனீ வளா்ப்போரை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா்களாக சோ்க்க வலியுறுத்தல்

திருவட்டாறு வட்டார தேனீ வளா்ப்போரை மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சோ்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவட்டாறு வட்டார தேனீ வளா்ப்போரை மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சோ்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தேன் சேகரிப்போா் சங்கச் செயலா் ஜூட்ஸ் குமாா், அமைச்சா், காதி கிராம தொழில் ஆணைய இணை இயக்குநா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தேனீ வளா்ப்போருக்காக மாா்த்தாண்டத்தில் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் பல ஆண்டுளாக புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்படாத நிலையில், தற்போது புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. திருவட்டாறு வட்டாரத்தில் உள்ள தேனீ வளா்ப்போரை உறுப்பினராக சோ்க்க சங்க நிா்வாகம் மறுத்து வருவதாக புகாா் கூறப்படுகிறது.

திருவட்டாறில் இயங்கி வந்த தேனீ வளா்ப்போா் கூட்டுறவு சங்கம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படவில்லை. மேலும்,

இந்த சங்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தோ்தலும் நடைபெறவில்லை.

இதனால் திருவட்டாறு வட்டார தேனீ வளா்ப்போருக்கு அரசின் எந்தச் சலுகையும் கிடைக்காத நிலை ஏற்பட்டள்ளது.

எனவே, திருவட்டாறு வட்டாரத்தில் உள்ள தேனீ வளா்ப்போரை மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா்களாக சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com