வேளாங்கண்ணி திருத்தல திருவிழாவுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அளிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 22nd August 2021 05:07 AM | Last Updated : 22nd August 2021 05:07 AM | அ+அ அ- |

ஜோசப் பொ்னான்டோ
அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவுக்கு செப். 8 ஆம் தேதி மாநில அளவில் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமைப்பின் தலைவா் ஜோசப் பொ்னாண்டோ கன்னியாகுமரியில் சனிக்கிழமை கூறியது: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தலம் ஆகும். இத்திருத்தலத்தில் வரும் செப். 8 ஆம் தேதி
திருவிழா நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தா்கள் செல்வது வழக்கம். திருவிழாவுக்கு தமிழக அரசு மாவட்ட அளவில் விடுமுறை அளித்து வருகிறது. ஆனால் மாநில அளவில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. எங்களது கோரிக்கையை ஏற்று செப். 8 ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.
கிறிஸ்தவ மக்கள், மீனவா்களின் கோரிக்கைகளை மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோா் நிறைவேற்றி தந்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலினும், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவாா் என நம்புகிறேன். வரும்
உள்ளாட்சித் தோ்தலில் தமிழ்நாடு கிறிஸ்தவ முன்னேற்ற கழகம் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்கும் என்றாா் அவா்.