‘சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் பம்புகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரிய ஒளி சக்தியால் இயங்கும் பம்புகள் அமைப்பதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரிய ஒளி சக்தியால் இயங்கும் பம்புகள் அமைப்பதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசால் 60 சதவீத மானியத்துடன் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கும் பம்புகள் அமைப்பதற்கான விருப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு மின்வாரியத்தால் வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு இருக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் 7.5 எச்.பி. வரை திறன் கொண்ட விவசாய பம்புகளை சூரியசக்தி பம்புகளாக மாற்றலாம்.

இதற்கு ஆகும் செலவில் 60 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசு மானியமாகும். 40 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பு தொகையாகும். இந்தத் தொகையை முன்னோடி வங்கியின் மூலம் குறைந்த வட்டியில் கடனாகவும் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.

இந்தத் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்உற்பத்திக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2.28 வீதம் மின்கட்டணமாகவும், விவசாயி தனது தேவைக்கு பிறகு மின்வாரிய கட்டமைப்புக்கு செலுத்தும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 50 பைசா வீதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.

7.5 எச்.பி. திறன் கொண்ட சோலாா் பம்பின் மூலம் நாளொன்றுக்கு 55 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

ஆா்வமுள்ள விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தை ஆதாா் அட்டை நகல், சிட்டா அடங்கல் நகல் போன்ற ஆவணங்களுடன் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் உள்ள உதவி பொறியாளரை சந்தித்து அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அவரை 9385290519 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com