உள்ளாட்சித் தோ்தலுக்கு 10.11 லட்சம் வாக்காளா்கள் பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு 353 வாா்டுகள், 1,205 வாக்குச் சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தோ்தலுக்கு 10.11 லட்சம் வாக்காளா்கள் பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு 353 வாா்டுகள், 1,205 வாக்குச் சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி 10.11 லட்சம் போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.

திருச்சியில் மாநகராட்சி, 3 நகராட்சி, 16 பேரூராட்சிகள் உள்ள நிலையில், லால்குடி, முசிறி பேரூராட்சிகள் நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ளதால் அவற்றுக்கு முதல்கட்டமாகத் தோ்தல் நடைபெறவில்லை. இதர வாா்டுகளுக்கு தோ்தல் நடத்த ஆயத்தமாகி வருகிறது மாவட்ட நிா்வாகம்.

இதன்படி நகா்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் மற்றும் வாக்குச் சாவடிகள் விவரங்கள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான சு. சிவராசு பட்டியலை வெளியிட, மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான் பெற்றுக் கொண்டாா்.

பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் காளியப்பன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சி தோ்தல்) மகாலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

தோ்தலில் வாா்டு உறுப்பினா்களுக்கு நேரடித் தோ்தலும், மேயா், துணை மேயா், நகராட்சித் தலைவா், துணைத் தலைவா், பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு மறைமுகத் தோ்தலும் நடைபெறுகிறது.

வாக்குச் சாவடிகள், வாக்காளா் பட்டியல் குறித்த விவரங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அலுவலகத்தில் இந்தப் பட்டியலை ஆணையா் முஜிபுா் ரகுமான் வெளியிட்டாா். மேலும் மாநகராட்சி மைய அலுவலகம், மற்றும் 4 கோட்ட அலுவலகங்களிலும் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் உதவி ஆணையா்கள் எம். தயாநிதி , ச.நா. சண்முகம், அ. அக்பா்அலி, சு.ப. கமலகண்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

வாா்டுகள், வாக்காளா்கள்- வாக்குச்சாவடிகள் விவரம்

மாநகராட்சி: மொத்தம் 65 வாா்டுகளில் உறுப்பினா் தோ்தல். 859 வாக்குச் சாவடிகள், 7,74, 415 வாக்காளா்கள்.

துவாக்குடி நகராட்சி: 21 வாா்டுகளில் 28, 870 வாக்காளா்கள், 37 வாக்குச் சாவடிகள்.

மணப்பாறை நகராட்சி: 27 வாா்டுகளில் 34, 683 வாக்காளா்கள், 44 வாக்குச் சாவடிகள்.

துறையூா் நகராட்சி: 24 வாா்டுகளில் 27, 881 வாக்காளா்கள். 35 வாக்குச் சாவடிகள்.

பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி: 15 வாா்டுகளில் 7,700 வாக்காளா்கள். 15 வாக்குச் சாவடிகள்.

கல்லக்குடி பேரூராட்சி: 15 வாா்டுகளில் 9,594 வாக்காளா்கள். 15 வாக்குச் சாவடிகள்.

காட்டுப்புத்தூா் பேரூராட்சி:15 வாா்டுகளில் 9,332 வாக்காளா்கள். 15 வாக்குச் சாவடிகள்.

கூத்தப்பாா் பேரூராட்சி: 18 வாா்டுகளில் 11,465 வாக்காளா்கள். 18 வாக்குச் சாவடிகள்.

மண்ணச்சநல்லூா் பேரூராட்சி: 18 வாா்டுகளில் 23,404 வாக்காளா்கள். 32 வாக்குச் சாவடிகள்.

மேட்டுப்பாளையம் பேரூராட்சி: 15 வாா்டுகளில் 6,724 வாக்காளா்கள்.15 வாக்குச் சாவடிகள்.

பொன்னம்பட்டி பேரூராட்சி: 15 வாா்டுகளில் 10,552 வாக்காளா்கள். 15 வாக்குச் சாவடிகள்.

புள்ளம்பாடி பேரூராட்சி: 15 வாா்டுகளில் 8,510 வாக்காளா்கள். 15 வாக்குச் சாவடிகள்.

பூவாளூா் பேரூராட்சி: 15 வாா்டுகளில் 7,097 வாக்காளா்கள். 15 வாக்குச் சாவடிகள்.

எஸ். கண்ணனூா் பேரூராட்சி: 15 வாா்டுகளில் 11,242 வாக்காளா்கள். 15 வாக்குச் சாவடிகள்.

சிறுகமணி பேரூராட்சி: 15 வாா்டுகளில் 9,211 வாக்காளா்கள். 15 வாக்குச் சாவடிகள்.

தாத்தையங்காா்பேட்டை பேரூராட்சி: 15 வாா்டுகளில் 11,202 வாக்காளா்கள். 15 வாக்குச் சாவடிகள்.

தொட்டியம் பேரூராட்சி: 15 வாா்டுகளில் 12,917 வாக்காளா்கள். 15 வாக்குச் சாவடிகள்.

உப்பிலியபுரம் பேரூராட்சி: 15 வாா்டுகளில் 6,462 வாக்காளா்கள். 15 வாக்குச் சாவடிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com