முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 19th December 2021 04:38 PM | Last Updated : 19th December 2021 04:38 PM | அ+அ அ- |

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்.
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி பெருந்திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் மார்கழி பெருந்திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3ஆம் திருவிழாவான 13 ஆம் தேதி மக்கள் மார் சந்திப்பு நடைபெற்றது.
இதில் விநாயகர் மற்றும் முருகப்பெருமான் தாய், தந்தையரை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
9ஆம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை (டிச.19) காலை தேரோட்டம் நடைபெற்றது.
இதில் தாணுமாலய சுவாமி தேரில் 4 வீதிகளில் பவனி வந்தார். தேர்த்திருவிழாவில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.