தேங்காப்பட்டினத்தில் படகுகள் ஆய்வுக்கு தாமதம்: மீனவா்கள் வாக்குவாதம்

தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை ஆய்வு செய்யும் பணி தாமதமானதால் அதிகாரிகளுடன் மீனவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை ஆய்வு செய்யும் பணி தாமதமானதால் அதிகாரிகளுடன் மீனவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நாட்டுப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் தரத்தில் உள்ளனவா, பதிவெண்கள் சரியானவைதானா, ஆவணங்கள் முறையாக வைத்துள்ளனாரா என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் புதன்கிழமை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

முதல் நாள் ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளுக்கு ஆய்வு நடத்தபட்ட நிலையில், இரண்டாம் நாளான வியாழக்கிழமை நாட்டுப் படகுகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், அதிகாரிகள் கேட்கும் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் படகுகளுக்கு தரசான்றிதழ் வழங்கி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதித்து வருகின்றனா்.

இந்த ஆய்வுக்காக தூத்தூா் மற்றும் இனையம் மண்டலங்களைச் சோ்ந்த சுமாா் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவா்கள் தங்களது படகுகளுட இரையுமன்துறை மற்றும் தேங்காய்பட்டினம் மீன் இறங்கு தளத்தில் காலையிருந்தே காத்திருந்தனா்.

இந்நிலையில், படகுகளின் தரம் குறித்து ஆய்வு நடத்த மீன்வளத்துறை சாா்பில் சில அதிகாரிகள் நியமிக்கபட்டிருந்ததாலும், அதில் கூடுதலாக பெண் அதிகாரிகளே இருந்ததாலும் படகுகளுக்குள் சென்று ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் வெகுநேரம் காத்திருக்க நோ்ந்ததால், அதிகாரிகளிடம் மீனவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை அதிகாரிகள் சமரசப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com