பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் சமூகநலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தையுடன் உள்ளவா்கள் கீழ்க்கண்ட சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

பெற்றோரின் வயதுச் சான்று, குழந்தையின் தாயாருக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும், குழந்தைகளின் பிறப்புச் சான்றுகள் (2 ஆவது குழந்தை 3 வயதுக்குள் இருக்க வேண்டும்),ஜாதிச்சான்று, குடும்பநல அறுவை சிகிச்சை சான்று, வருமானச் சான்று ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இருப்பிடச் சான்று, ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்), வசிப்பிட சான்று (கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்றிருக்க வேண்டும்), உறுதிமொழி பத்திரம் (ரூ. 20 பத்திரத்தில்), குடும்ப அட்டை, குடும்ப புகைப்படம்.

மேற்கண்ட சான்றுகளுடன், விண்ணப்பத்தினை அருகிலுள்ள இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com