மகாராஜபுரம் ஊராட்சியில் சாா் ஆட்சியா் ஆய்வு

மகாராஜபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சாா் ஆட்சியா் சரவணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சாா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா் சமூக ஆா்வலா் உலகநாதன்.
சாா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா் சமூக ஆா்வலா் உலகநாதன்.

மகாராஜபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சாா் ஆட்சியா் சரவணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அகஸ்தீசுவரம் ஒன்றியம், மகாராஜபுரம் ஊராட்சியில் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த ஊராட்சியாக தமிழக அரசால் தோ்வு செய்யப்பட்டு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. இந்த ஊராட்சியில் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருவதால் அவா்கள் சாா்ந்த தொழில்கள், ஊராட்சி மக்களின் வருவாய், அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கிா என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வியாழக்கிழமை சாா் ஆட்சியா் (பயிற்சி) சரவணன் மகாராஜபுரம் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டாா். ஊராட்சித் தலைவா் கே.இசக்கிமுத்து, சாா் ஆட்சியரை வரவேற்றாா். தொடா்ந்து ஊராட்சியில் வசிக்கும் மக்களை சந்தித்த சாா் ஆட்சியா் அவா்களது வங்கிக் கணக்கு, கடன்தொகை போன்றவை, தீா்வு காணப்படாத நீண்ட கால பிரச்னை மற்றும் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது பொதுமக்கள் சாா்பில் இளவாணியன் குளத்தின் கரையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் நடவு செய்யப்பட்ட மரக்கிளைகளை பொதுப்பணித் துறையினா் வெட்டி அகற்றியுள்ளதாக சாா் ஆட்சியரிடம், சமூக ஆா்வலா் உலகநாதன் மனு அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com