‘வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா், அதற்கு மேலுள்ள கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து தொடா்ந்து புதுப்பித்து வரும் பதிவுதாரா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாா்ச் 31 ஆம் தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.12.2020இல் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு 45 வயதும், அனைத்து பிரிவினா்களுக்கும் 40 வயதும் நிறைவடையாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவுசெய்து 31.12.2020 தேதியில் ஒரு வருடம் முடிவுற்றிருந்தால் போதுமானது. மாற்றுத் திறனாளி களுக்கு வயது மற்றும் வருமான உச்சவரம்பு ஏதுமில்லை).

பள்ளியிறுதி வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.200, பள்ளியிறுதி வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றோருக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 அரசால் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளியிறுதி வகுப்பிற்குகீழ் மற்றும் பள்ளியிறுதி வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றோருக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கூறப்பட்டுள்ள தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரா்கள் அலுவலக வேலை நாள்களில் நாகா்கோவில் கோணத்தில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாளஅட்டை, அனைத்து கல்விச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ்களின் அசலுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்த படிவத்தில் வருவாய் ஆய்வாளரிடம் இருந்து வருமானச் சான்றில் கையொப்பம் பெற்று தங்களது புகைப்படம் ஒன்று, ஆதாா் அட்டை, குடும்ப அடையாளஅட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஜாதிச் சான்றிதழ், அனைத்து கல்விச் சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ்களின் ஒளிநகல்களை இணைத்து இம்மாத இறுதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானச் சான்று தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com