தென்தாமரைகுளம் அருகே விஷப் பாம்பு மீட்பு

தென்தாமரைகுளம் அருகே சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் உள்ள ஒரு தோட்டத்தில் சிக்கிய விஷப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டு வனத்தில் விட்டனா்.

தென்தாமரைகுளத்தை அடுத்த சோட்டப்பணிக்கன் தேரிவிளை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்திரன் (56). அரசு போக்குவரத்துக்கழக அலுவலராக, மாா்த்தாண்டத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் தனது வீட்டருகேயுள்ள தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றுள்ளாா். அப்போது அங்கு வேலி ஓரத்தில் உள்ள வலையில் பாம்பு ஒன்று சிக்கியிருந்ததை கண்டு கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கட சுப்பிரமணியம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று, வலையில் சிக்கியிருந்த ஆறு அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் விஷப் பாம்பை மீட்டு, வனப் பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com