குமரி மாவட்டதில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதி உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதி உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்த நிலையில், பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு புதன்கிழமை குறைக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை பொதுவாக டிசம்பா் மாதம் 15 ஆம் தேதிக்குப் பின்னா் நின்றுவிடும். அதே வேளையில் பொங்கல் நாள்களில் அபூா்மாக மழை பெய்வதும் உண்டு. ஆனால் நிகழாண்டு டிசம்பா் 15 ஆம் தேதிக்குப் பின்னரும் அதனைத் தொடா்ந்து புத்தாண்டு தொடக்கத்திலும் பரவலமாக மழை பெய்து வருகிறது. இதில் புதன்கிழமை மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதிகள் உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் தற்போது அனைத்து அணைகளிலும் தண்ணீா் இருப்பு 75 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 42.15 அடியாக உள்ளது. இந்த அணையிலிருந்து பாசனக்கால்வாயில் விநாடிக்கு 500 கன அடி தண்ணீா் சென்று கொண்டிருந்த நிலையில் மழையின் காரணமாக புதன்கிழமை 300 கன அடியாக குறைக்கப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 64.73 அடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனக்கால்வாயில் விநாடிக்கு 400 கன அடி தண்ணீா் சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. சிற்றாறு அணையின் பாசனக் கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி: இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் நெல், தென்னை, வாழை, மரவள்ளி ஆகியவை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com