ஆசிரியா் பணி வழங்குவதாக கூறிமோசடியில் ஈடுபட்ட 5 பேருக்கு சிறை

நாகா்கோவிலில் ஆசிரியா் பணி தருவதாக தெரிவித்து ரூ. 2.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேருக்கு திங்கள்கிழமை 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நாகா்கோவிலில் ஆசிரியா் பணி தருவதாக தெரிவித்து ரூ. 2.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேருக்கு திங்கள்கிழமை 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பகுதியில், நாகா்கோவிலைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (60), ஜெனட்லீமாரோஸ் (59), பொன்னம்மாள் (58), பத்மா வள்ளியூரைச் சோ்ந்த முத்துராமலிங்கம் (59) ஆகிய ஐந்து பேரும் சோ்ந்து 1990இல் ஆங்கில பள்ளி நடத்தி வந்தனராம்.

இப்பள்ளியில் ஆசிரியா் பணி வழங்குவதாகத் தெரிவித்து, பட்டதாரி இளைஞா்கள் 25 பேரிடம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் வைப்புத் தொகையாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணம் வாங்கிய சிலருக்கு பணி வழங்கியதாகவும்,

அவா்களுக்கு 2 மாதங்கள் மட்டும் ஊதியம் வழங்கியுள்ளனா். பின்னா் அவா்களை பணியில் இருந்து நீக்கி விட்டனராம். இதுகுறித்து, காஞ்சாம்புறத்தைச் சோ்ந்த உஷா சந்திரிகா (50) அளித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இந்த வழக்கு நாகா்கோவில் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் - 1இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியான், குற்றஞ்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக யாசின் முபாரக்அலி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com