திமுகவில் சமூக நீதி இல்லை: பாஜக மாநிலத் தலைவா்

சமூக நீதி பேசும் திமுகவில், சமூக நீதி இல்லை என்றாா் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன். குமரி மாவட்டம், அருமனையில் வட்டார அனைத்து
கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன்.
கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன்.

சமூக நீதி பேசும் திமுகவில், சமூக நீதி இல்லை என்றாா் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன். குமரி மாவட்டம், அருமனையில் வட்டார அனைத்து இந்து சமுதாயம் மற்றும் ஆலய கமிட்டிகள் இணைந்து திங்கள்கிழமை நடத்திய பொங்கல் விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: இந்தியாவில் தயாரிப்போம் உள்பட பிரதமரின் பல்வேறு திட்டங்கள் குறித்து புரிந்துகொண்ட மக்கள், தற்போது பாஜகவில் இணைந்து வருகின்றனா். இந்தியாவில் தயாா் செய்யப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்தை 63 நாடுகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன.

வேல் யாத்திரையில் விடுத்த கோரிக்கையையடுத்து இப்போது தைப்பூசத்திற்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் முருக பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பொன். ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராக இருந்த போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.திமுகவிலும், காங்கிரஸிலும் வாரிசு அரசியல் நடைபெறுகிறது. சமூக நீதி, பெண்ணுரிமை குறித்து பேசும் திமுகவில், சமூக நீதியும் இல்லை, பெண்ணுரிமையும் இல்லை. இதற்கு எடுத்துக்காட்டு, திமுகவினா் நடத்திய மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பெண் தாக்கப்பட்ட சம்பவமாகும்.

தமிழகத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் ஸ்டாலின் ஆட்சிக்கு வரமுடியாது என்றாா் அவா்.

பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், அடுத்த ஆண்டு இங்கே நடைபெறும் பொங்கல் விழாவில் நாம் ஆதரிக்கும் முதல்வா் பங்கேற்பாா் என்றாா்.

கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது: வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காக கொண்டுவரப்பட்டது. கடந்த தோ்தல்களின்போது மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் தங்கள் தோ்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிதான் அது. தற்போது சட்டமாக்கிய பின்னா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

பெண்களுக்கு மரியாதையையும், தகுதியையும் அங்கீகரித்து பதவியையும், பாதுகாப்பையும் அளிப்பது பாஜக மட்டும்தான் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு, விழாக் குழுத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். குழிச்சல் செல்லன், திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலா் ஆஷா நாத், பாஜக மாநிலச் செயலா் உமாரதி ராஜன், மாவட்டத் தலைவா் தா்மராஜ், மாநிலத் துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், நடிகா் சிபு பஞ்சு அருணாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழாக் குழு துணைத் தலைவா் சனல் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com